Saturday, May 9, 2009

மனிதாபிமானமா?மரத்துப்போன நிலையா?மானிடமே பதில் சொல்

இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் போர் நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின்உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. இது ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் கூற்று
இரண்டு தசாப்தங்களுக்ளுக்கு முன்னால் ஈழத் தமிழ் மக்களுக்கு அரைகுறையான தீர்வுத் திட்டத்தைக் கூடக் கொடுக்க விரும்பாத ஸ்ரீலங்காவின் சிங்கள இனவாதிகள், இன்று எப்படி ஈழத் தமிழினத்தை தங்களுடன் சமஉரிமை தந்து ஐக்கிய இலங்கையில் ஒன்றாக உயிருடன் வாழ விரும்புவார்கள் என்பதை சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தால் படிக்காத பாமரனால் கூட தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
அத்தகைய ஓர் நிலையில் இன்று முழுமையான இராணுவ உதவி, இராணுவ ஆலோசனை, இரணுவ உளவு வேலை,இராணுவ தொழில் நுட்பம், இராணுவ தளபாடங்கள், ஆட்கொல்லிகொத்தணி-பொஸ்பரஸ்-எரிவாயு குண்டுகள் இவற்றையெல்லாம் வாரிவழங்கிய பாரத அரசு ஸ்ரீலங்கா சிங்கள அரசிடமிருந்து பாராட்டுப் பத்திரத்தை நன்றியுடன் பெற்றிருக்கின்றது.
இதற்கு ஈடாக இந்திய அரசு அவர்களுக்குக் கைமாறாகக் கொடுத்தது பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்களின் உயிர்களும், இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை சிங்கள இராணுவத்தின் அடிமைச் சேவகத்திற்கும், அப்பாவித் தமிழ் பெண்களை கட்டாயத்தின் பேரில் கற்பழிப்பு, கருக்கலைப்பு, கற்பத்தடை. இன்னோரன்ன அழிவுகளின் ஆபத்தான நிலை.
இதனைத் தொடர்ந்து பாரத அரசே! இன்னும் என்ன செய்யப் போகிறாய்? ஈழத் தமிழர்களின் இன்னல் களையவேண்டி உனது கரங்கள் அவர்களின் இடர்களுக்கும், அழிவுகளுக்கும் எதிரிகளுக்கு எல்லாவகையிலும் உதவிசெய்து உனது பாராட்டுப் பத்திரத்தை வாங்கிப் பத்திரப்படுத்தியிருக்கிறாய்.
போதுமா இது? இல்ல , இன்னமும் ஈழத் தமிழர்களைக் காவு கொடுத்து உனது கபடநாடகத் தனத்தை காட்ட முயற்சிக்கப் போகிறாயா? உலகம் முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து ஸ்ரீலங்கா அரசை யுத்தநிறுத்தம் எனும் முடிவினை இறுக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க நீ மட்டும் கடைசிவரை வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு இன்று தேர்தல் நாடகத்திற்காக உனது பசப்பு வார்த்தைகளையும், பாசாங்குகளையும் அரங்கேற்றுகின்றாய்.
சாதாரண மக்களுக்கு உனது நாடகமெல்லாம் தெரியாமல் போய்விடலாம். ஆனால் ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற கூத்தவைப்புலவனின் கூற்று பொய்த்துவிடாது. எங்கள் அழிவினால் ஏற்பட்ட பாவம் உங்கள் பக்கத்திலேயே பங்குதாரர்களாக நிற்கின்றது.
அன்னை இந்திரா காந்தியினதும், அவர் தம் புதல்வர்கள் இருவரினதும் சாவுக்குக் காரணமானவர்கள் உங்கள் பக்கத்தில் இருந்த பசப்பு வார்த்தைகளால் உங்கள் கண்களையும் மறைத்துக் கொண்டிருக்கும் பாசாங்குக்காரர்கள் என்பது வெகுவிரைவில் உங்களுக்குத் தெரியவரும்
அப்போது, அவர்கள் மீதமாயிருக்கும் உங்களது விதியையும் முடித்துவிட்டு பழியை யார்தலையிலாவது போடுவார்கள். அதையும் ஆமாமம் சாமி என்று சொல்லிக்கொள்ள ஆயிரம்சாமிகள் அங்கே காத்திருப்பார்கள். முடிந்தால் உண்மையை உணர்ந்து திருந்த முயற்சியுங்கள். இல்லையென்றால் உங்களை அந்த ஆண்டவன் கூடக் காப்பாத்த முடியாது. எதிரிகள் என்றும் உங்கள் பக்கத்தில்.........
- சங்கிலியன் -

0 comments: