அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள்சொல்லும் கருத்து.நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும் . எப்படி ? அம்மாவுக்குமின்விசிறி, போர்வை வேணும்னா , ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான்வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒருதலைவர்.ஆனா நம்ம எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்கவேலைக்கு போவோம். ஒரு ஃப்ளாட் , கார், 29 இன்ச் கலர் டீவி , வித விதமா செல்போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள்நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாமஇருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடாவிளையாடறீங்களா?படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய்கிழிய பேசுவோம் . பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம்.தமிழ் நாட்டோட Literacy rate 73%.. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்காஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும், ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம். கேட்டா ,வாக்காளர் அடையாள அட்டை இல்லை ,ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம்.லைசன்ஸ் எடுக்கஎடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சிசெய்யமாட்டோம். திருப்பதிலஒரு நாள்கூட க்யூல நிப்போம், அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்கமாட்டோம் . கேட்டா, நான்ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஒருசப்ப காரணம் சொல்லுவோம். வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனாஇருக்கனும், படிக்காதமக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம்தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பைதொட்டில போட மாட்டோம்.வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய்,ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம்.இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்றசின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம்கூட கவலைப்பட மாட்டோம் .எத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம்? எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோஅப்படியெல்லாம் ஏமாத்துவோம் . வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன்ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம் . இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி ,ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.ரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்குசமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம்,இரண்டு நிமிடத்திற்காக ) நேர்மையை இழக்கும் நமக்காக, தலைவர்கள் என்ன வானத்துலஇருந்தா வருவாங்க?அவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம்.அவ்வளவுதான்.படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில்போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்லஉக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென்பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையேசுத்தப்படுத்திடலாம்.அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோஇல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம்,தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம் . எல்லாரும் ஒரு நாளைக்கு ஒருஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பாஎல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன்வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும்நடக்காது .நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான் ... மக்கள்னா வேற யாரும் இல்லை . நாமதான்....(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் )
மாற்றத்தை விரும்பும்,
சுரேஷ் குமார்
Wednesday, May 13, 2009
அரசியல்னா
Posted by BHARATHAMAINTHAN at 7:18 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment