Sunday, April 5, 2009

வேண்டுவீர்களா மனித தெய்வங்களே.........??



வாழ்வதற்காக நான் படைத்த என் மக்கள்

வாழ்வைத் தொலைத்து வீதியில் வழிதவறி

அடிப்படைத் தேவைக்கே அல்லல் பட,

எனைக் காப்பதாய் நினைத்து நீ

கடிவாலமிட்டுச் சென்ற கட்டிடத்திற்குள்

கதறிக் கொண்டிருக்கிறேன் நான்..

அழத்தெரியாமலே அழும் பிஞ்சுகள்...::::

உயர்ந்தோர் என்பதால் இஸ்ரேலிடம் பாலஸ்தீனமும்......

சிங்களத்திடம் தமிழ் ஈழமும்.....

வீழ்ந்து கொடிருக்கிறது....!!!!எஞ்சி இருப்பது கண்ணீர் மட்டும்தான்...

அதை கொண்டு யாரிடம் போரிட.......,

கடவுளிடமா..? மனிதர்களிடமா...???

எவ்வளவு தேடியும் இவர்களை பார்க்கமுடியவில்லை..!!!

தாழ்ந்தவர்கள் என்பதால் இன்று வீழ்ந்து போகிறோம்.....

வாழ்ந்து பார்க்க ஆசையாய் இருந்தும்..!!!!

உயர்ந்தோரே நாங்கள் அழிந்த பிறகு...

எங்கள் கண்ணீர் கதறலை வரலாறு பேசும்...

உங்கள் குழந்தைகளும் படித்து அழும்.!!

அந்த கண் நீரிலாவது மிருகத்தை கரைத்து...

மனிதனாய் வாருங்கள்....

எங்கள் பிஞ்சுகலாவது மனிதர்களை பார்க்கட்டும்..!!!

அழக்கூட தெரியாமலே அழும்....எங்கள் குழந்தைகளுக்காய்,

ஓரு முறை வேண்டுங்கள்..!!

இருக்க ஆசைப்படும் முடியவில்லை...

இதோ இறக்கிறோம் ........

மரணத்தின் மயக்கத்தில் இருக்கும் எங்கள் .......பிஞ்சுகளுக்காய்,

வேண்டுவீர்களா மனித தெய்வங்களே.........??

நன்றி

அன்பு தோழர்

- திரு.இராஜா சிங்

0 comments: