Monday, April 6, 2009

விதி பழித்தல் !

விதி.,

எத்தனை முறை

என்னை வீழ்த்தினாலும்

மண்ணோடு மண்ணாய்

மக்கிபோவதற்கு

மரமல்ல - நான்...!

மரமல்ல நான்..,

விதை! -

நான் விதை..!

வேரூன்றி வெடித்தேழுவேன்..!

வினை கிழித்து முளைத்தேழுவேன்..!

விதியையே கொம்பாக்கி படர்வேன்..!

என் விழைவுகளால் விதியை மூடுவேன்..!

என் எண்ணங்களையே

வண்ண மலர்களாக்கி ,

வான் நோக்கி பூத்து சிரிப்பேன் ..!

நான் தரும் நிழலில்

விதியே வந்து இளைப்பாறு

என்பேன்

- நன்றி -

என் அன்பு நண்பர்

தமிழ் ஆர்வலர் திரு . இரமேசு

1 comments:

BHARATHAMAINTHAN said...
This comment has been removed by the author.