Thursday, April 16, 2009

இந்தியாவின் நிலைப்பாடு...!

1) சிங்கள அரசிற்கு போரில் உதவக்கூடிய ரேடார் கருவிகளை தாங்கள் கொடுத்து உதவவில்லை எனச் சொன்னது.
2) வெளியுறவுத்துறை மந்திரி இலங்கைக்கு சென்று போரை நிறுத்த கோரிக்கை வைக்கப் போவதாக சொன்னது.
3) இந்திய ராணுவ வீரர்களை இலங்கை அரசின் சார்பாக களத்தில் இறக்கி அப்பாவி மக்களின் உயிர்களை அழித்துக்கொண்டிருக்கிறது. ராஜபக்சேயை ஒரு கருவியாக வைத்து சோனியா தனது தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.
போரில் உயிரை விடும் இந்திய ராணுவ வீரர்கள் பற்றிய எந்தவொரு செய்திகளும் காணோம்.
பாவம்.. ஈழ மக்கள் இறந்தாலும் சொல்ல, கேட்க, வருத்தப்பட நாதியிருக்கிறது.
நமது ராணுவ வீரர்களின் நிலை அதைவிட பரிதாபமான நிலை.
உலக வரலாற்றில் இலங்கை இனப்படுகொலையை பற்றித் படித்து தெரிந்துகொள்ளப் போகும்
நாளைய சமுதாயம் இந்திய அரசின் நயவஞ்சக , கண்ணியமற்ற வெளியுறவுக் கொள்கை
நிலையினையும் கண்டிப்பாக நினைவில் நிறுத்தும்.
ஒவ்வொரு தமிழனும் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை நினைத்து
வெட்கித் தலைகுனியவேண்டிய தருணங்கள்.. காலம் பதில் சொல்லும்..

0 comments: