20 ஆண்டுகளுக்கு முன்பு 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஒரு கட்சி மசூதியை இடித்துக் கோயில் கட்டவேண்டும் என்று பேசி - கிளர்ச்சி செய்து, இந்து மக்களின் மலிவான மத உணர்ச்சியைக் கிளப்பிவிட்டு ஊதிப் பெரிதாக்கி 184 எம்.பி.க்களைப் பெறும் அளவுக்கு மக்கள் ஏமாந்து போகும் நிலை ஏற்பட்டது. பின்னர் 5 ஆண்டுகளில் நாட்டை ஆளும் அவலம் கூட ஏற்பட்டுவிட்டது.
அவர்களின் ஆட்சிக் காலத்தில் எவ்வளவு மோசமாக இந்துமத வெறி தலை தூக்கி ஆடியது என்பதை நியாய உணர்வு கொண்ட எவரும் மறைக்கவோ, மறுக்கவோ மறக்கவோ முடியாது. முழுக்கவும் காவி மயமாக்க வேண்டும் என்பதால் கல்வியைக் கறைப்படுத்தினார்கள்.
பாட நூல்களை எல்லாம் மாற்றினார்கள். இந்து மதமே உயர்ந்தது என்பதைப்போலவும், ஆரியர்கள் சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள், அவர்களின் தந்தையர் நாடான பாரதம் பாரிலேயே உயர்ந்த நாடு - அதற்கு அடிப்படைக் காரணம் ஆரியக் கலாச்சாரம் என்றெல்லாம் கல்வித் திட்டத்தைத் தலைகீழாக மாற்றி எழுதிவிட்டார்கள்.
அறிவற்றவன் கடலில் தூக்கிப் போட்ட கல்லைத் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற கடினமான பணியில் பின்னர் வந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈடுபட்டுப் பெருத்த முயற்சிக்குப் பின் உண்மை வரலாற்றைச் சொல்லித் தரும் நிலையை உருவாக்கியது. ஆனாலும் இன்னும் திருத்தம் செய்ய வேண்டிய நிலை.
மதவெறி எவ்வளவு தூரம் சல்லடம் கட்டிக் கிளம்புகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு
"ராமர் கோவில் கட்டியே தீருவோம் "- பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகிறார்!புதுடில்லி, பிப். 8- பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியே தீருவோம்; அதற்கான உரிய வாய்ப்புக்காகக் காத்திருக்கிறோம் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கோயில் கட்டுவதா"எதிர்கால பிரதமரின்" பணி?
நாங்கள் ராமனைவிட்டு விலகுவதுமில்லை; ராமனுக்குக் கோயில் கட்டும் ஆசையை விட்டுப் பிரிகிறதும் இல்லை" என்று பேசியுள்ளார் அத்வானி.ராமனுக்கே வெற்றி என்கிற பிற்போக்குத்தனமான முழக்கம் அவர்களின் இதயத்திலிருந்து வருகிறதாம்.பா.ஜ.கட்சி மீண்டும் பதவிக்கு வந்ததும் கோயிலைக் கட்டத் தொடங்குவார்களாம்! எதிர்காலப் பிரதமர், மக்கள் நல் வாழ்வுக்கான திட்டங்களைச் சொல்லிப் பிரச்சாரம் செய்யாமல் - மறைமுக மதவெறித் திட்டத்தைப் பேசுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment